Comments on: ?நேரலை 10-04-2024 சென்னிமலை பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | ஈரோடு வேட்பாளர் மரு. மு.கார்மேகன் LIV https://www.maduraidistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-3/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Sat, 13 Apr 2024 11:43:47 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: @sadasivamsm8690 https://www.maduraidistrict.com/%f0%9f%94%b4%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%b2%e0%af%88-10-04-2024-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4%e0%af%81%e0%ae%95-3/#comment-58131 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=15905#comment-58131 ? அனைவருக்கும் வணக்கம். திரு சந்திரமோகன் அவர்கள் பேசுகையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் சுவர் அமைக்க விடமாட்டோம் என சொல்லியுள்ளார். மரியாதைக்குரிய நீதியரசர், திரு மோகனகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான ஆய்வுக் குழுவின அறிக்கையின் படியே, கீழ் பவானி வாய்க்காலில் வேலை செய்ய, அரசாணை எண் 276- எடப்பாடியார் ஆட்சியில் பிறப்பிக்கப்பட்டது. இதற்காக ரூபாய் 709 கோடி ஒதுக்கப்பட்டது. பின்வந்த திமுக ஆட்சியில், மேற்படி வேலையை செய்யாததால், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில், அரசாணை எண் 276 படி வாய்க்காலில் வேலை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள். அதன் அடிப்படையில், கடந்த மே மாதம் ஒன்னாம் தேதி உடனே வேலையை ஆரம்பிக்க வேண்டும் என, மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனாலும் சிலர், ஈரோடு அமைச்சர் மாண்புமிகு திரு முத்துசாமி அவர்கள் தூண்டுதலால் பிரச்சனை செய்ததால், இரு தரப்பின் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வேலை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், எதிர்ப்பாளர்கள், ஒப்பந்ததாரர்களின் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள், கான்கிரீட் போடுவதை தடுத்தார்கள். விவசாய சங்கப் பிரதிநிதிகள், காவல்துறையில் நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு கொடுத்தபோது, அதை மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்கள் தூண்டுதலால் பதிவு செய்யவில்லை. தற்போது விவசாய சங்கத்தின் மூலம், மாண்புமிகு திரு முத்துசாமி அவர்கள் பெயரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க திரு சந்திரமோகன் பேசியது மிகவும் வருந்தத்தக்கது. கீழ் பவனி வாய்க்காலில், பொதுவாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி நன்செய் பாசனத்திற்கு தண்ணீர் விடுவார்கள். மேல்பகுதியில் உள்ள விவசாயிகள் நடவு நடும் போது, கடைமடைப் பகுதியில் உள்ள விவசாயிகள் நாற்று விடுவார்கள். இந்த அவலநிலை மாற, அரசாணை எண் 276 ன் படி வாய்க்காலில் வேலை செய்ய வேண்டியது, காலத்தின் கட்டாயம். இதுபற்றி திரு சந்திரமோகன் அவர்கள் இன்னும் நன்றாக தெரிந்து கொள்ள, கடைமடை பகுதியான மங்களப் பட்டியலும் , கரூர் மாவட்டத்தில் உள்ள கடைமடைப் பகுதியிலும் ஆய்வு செய்து பாருங்கள். கடைமடை விவசாயிகளின் பாதிப்பு தெரிய வேண்டும் என்றால், திரு சந்திரமோகன் அவர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை, இனமாக குத்தகைக்கு தர தயாராக உள்ளோம் . இது உங்கள் வேட்பாளருக்கு விழும் வாக்குகளையும் பாதிக்கும். இதை மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். மேலும் தயவுசெய்து பொது மேடையில் அரசியல் தலைவர்களைப் பற்றி பேசும் போது தயவுசெய்து மரியாதை கொடுத்து பேசுங்கள் அதுதான் அரசியல் நாகரிகம் உங்களுக்கும் அது வளர்ச்சியாகும் ?

]]>