MaduraiDistrict.com

Login Here


Home
மதுரை மாவட்டம் ஒரு பார்வை E-mail

மதுரை மாவட்டம் [Madurai District], தமிழகத்தின் 32 மாவட்டத்திற்க்குள் ஒன்று ஆகும். இம்மாவட்டத்தின் தலைமையகம் மதுரை [Madurai] ஆகும். இம்மாவட்டம் சுமார் 3,741 சதுர.கி.மீ. பரவியுள்ளது. மதுரை ஒரு மாநகராட்சி ஆகும். செப்டம்பர் மாதம் 1985-ல் திண்டுக்கல் மாவட்டம் இம்மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உருவானது.

மதுரை மாவட்டத்தில் [Madurai District] இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் : 

*     திண்டுக்கல் மாவட்டம் - Dindigul District
*     ராமநாதபுரம் மாவட்டம் - Ramanathapuram District
*     சிவகங்கை மாவட்டம் - Sivagangai District
*     தேனி மாவட்டம் - Theni District
*     விருதுநகர் மாவட்டம் - Virudhunagar District

மதுரை மாவட்டம் [Madurai District], 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] இம்மாவட்டத்தில் 25,78,201 பேர் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்போது இங்கு 77.8% பேர் படித்தவர்கள்,  2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி [Census] 30,41,038 பேர் உள்ளதாகவும், இதில் 15,28,308 ஆண்களும் 15,12,730 பெண்கள் உள்ளனர். இங்கு 81.7% பேர் படித்தவர்கள்.

மதுரை மாவட்டத்திற்க்கு [Madurai District], தெற்கில் விருதுநகர் மாவட்டமும் [Virudhunagar District] மேற்கில் தேனி மாவட்டமும் [Theni District] வடக்கில் திண்டுக்கல் மாவட்டமும் [Dindigul District] வடகிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும் [Tiruchirappalli District] கிழக்கில் சிவகங்கை மாவட்டமும் [Sivagangai District] உள்ளது.

மதுரை மாவட்டம் [Madurai District], 7 தாலுக்காகளக பிரிக்கப்பட்டுள்ளது.

*  Madurai (North) Taluk - மதுரை (வடக்கு) வட்டம்
*  Madurai (South) Taluk - மதுரை (தெற்கு) வட்டம்
*  Melur Taluk - மேலூர் வட்டம்
*  Peraiyur Taluk - பேரையூர் வட்டம்
*  Tirumangalam Taluk - திருமங்கலம் வட்டம்
*  Usilampatti Taluk - உசிலம்பட்டி வட்டம்
*  Vadipatti Taluk - வாடிப்பட்டி வட்டம்


மதுரை மாவட்டத்தில் [Madurai District], 5 நகராட்சிகள் உள்ளன.

*     ஆனையூர் நகராட்சி - Anaiyur Municipality
*     மேலூர் நகராட்சி - Melur Municipality
*     திருப்பரங்குன்றம் நகராட்சி - Thiruparankundram Municipality
*     திருமங்கலம் நகராட்சி - Tirumangalam Municipality
*     உசிலம்பட்டி நகராட்சி - Usilampatti Municipality

 

 

Latest Info


Polls

MaduraiDistrict.com is a site for?
 

Scan it with Smart Phone [Iphone / Android / Blackberry & etc.,]

Share This Page


Who's Online

We have 14 guests online
 

Latest News

Latest Info